Type Here to Get Search Results !

சூரன் போர் 2017

சூரசங்காரம் என்னும் நிகழ்வு சிவபக்தனான சூர-பதுமனின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ளவும், தேவர்களின் துயர் போக்கவும் இறைவனால் நிகழ்த்தப் பெற்ற ஒரு திருவிளையாடல் என கந்தபுராணம் வர்ணிக்கின்றது.

முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மனாதியோரை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். சூரபத்மன்; ஒருபாதி “நான்” என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது”என்கின்ற மமகாரமாகவும் அமையப் பெற்றவன்.

சூர-பன்மன் ஆணவ மலம் கொண்டவன். சிங்கமுகன் கன்ம மலத்தின் வடிவம்.தாரகாசுரன் மாயா மலம் உடையவன். இவர்களை ஞானம் என்கின்ற முருகனது வேல் வெல்கிறது. அதாவது எம்மைப் பீடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் இருந்து வீடுபேறடைய ஞானம் என்ற இறை சக்தியால் மட்டுமே முடியும் என்பதையே இன் நிகழ்வு எமக்கு அறிவுறுத்துகின்றது.



















Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.