ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சரீரத்தையே அடைகிறது. ஆகவே பக்திமுறை மிகவும் அவசியமானது. இடைவிடாத தியானத்தினால் மனதில் உலக எண்ணம் ஏற்படாதிருக்கும்போது ஜீவனிடத்தில் இறைவன் எண்ணமே நிறைந்திருக்கும். இறைவனிடத்தில் பக்தியல்லாத குறையினால்தான் மனிதன் துன்பப்படுகிறான். கடைசிக் காலத்தில் இறைவனுடைய எண்ணம் உண்டாகும்படியான வழிகளை மனிதன் அனுசரிக்க வேண்டும்.(இராமகிருஷ்ண பரமஹம்ஸர்)
பெண்களின் நடை, உடை, பாவனை, அளவுக்கதிகமான அலங்காரம் போன்றவைகள்தாம் ஆடவர்களின் சிருங்கார சேஷ்டைகளுக்குக் காரணமாக இருப்பதால், இதுபோன்ற விடங்களில் பெண்கள் சாதாரணமான அலங்காரத்துடன் இருக்கவேண்டியது அவசியம். மூடனாக இருப்பவன்கூட காமத்திற்கு விதிவிலக்கல்ல என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதால் பெண்கள் காரணமின்றித் தங்களை மிதமாக அழகுபடுத்திக் கொள்ளக்கூடாது. சாஸ்திரங்களை மீறுவதும்கூட பாவமான செயல்தான். (இந்துதர்ம சாத்திரம்)உன்னால் மற்றவர்களுக்குச் செய்யப்பட்ட நன்மைகளை மறந்தவிடு. மற்றவர்கள் உனக்குச் செய்த தீமைகளையும் மறந்துவிடு. உன்னிடம் அன்பை வளர்த்துக்கொள். மற்றவர்களுக்கு உதவிசெய். அடுத்தவர்களை ஒருபோதும் துன்புறுத்தாதே! சுயநலம் இருக்கும்வரை, மனிதனிடமிருக்கும் நல்ல குணநலன்கள் வெளிப்படமாட்டா. அதன்காரணமாக அவனிடம் உயர் சீலமும் இருக்கமுடியாது. ஒருவனது நன்னடத்தையே அவனுடைய உண்மையான வலிமையாகும். நன்னடத்தையுடன் வாழ்பவனுக்கே இறைவன் அருள்பாலிக்கின்றார். (சத்யசாயி பாபா)முயற்சியுடன் செயற்படுபவர்களை மாத்திரமே வெற்றி தழுவும். பின் விளைவுகளுக்கு அஞ்சும் கோழைகளைத் தேடி வெற்றி செல்லாது. (ஜவகர்லால் நேரு) ஒரு மனிதன் பலமுறை தோற்கலாம். ஆனால் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், இன்னொருவரைக் காரணமாகக் காட்டத் தொடங்கும் பொழுது அவன் வெற்றி வாய்ப்பை இழக்கிறான். (பபல்லோ) வெற்றி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும் போட்டியில் கலந்து கொள்ளாதீர். போட்டியிடுவதற்காகவே போட்டியில் பங்குபெறுவீர். (ஜோர்ஜ் ஹெர்பட்)
ஒரு சிறந்த மனிதனுக்கு மூன்று அறிகுறிகள் உள்ளன. நல்லொழுக்கத்துடன் இருப்பதால் விசாரமில்லாமல் இருக்கிறான். அறிவோடு இருப்பதால் மனக்கலக்கமில்லாமல் இருக்கிறான். தைரியமாக இருப்பதால் பயமின்றி இருக்கிறான். (கன்பூஸியஸ்) வாயிலிருந்து வரும் சொற்கள் தான் ஒருவனுடைய உடைகள். அவைகளைக் கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தவேண்டாமே. (செஸ்டர் பீல்ட்) ஒருவனை எப்படி அளவிட வேண்டுமென்று தெரிந்து கொண்டால், ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகமே.(வில்லியம் எல்லேரி சேனிங்)எல்லா இடங்களிலும், எல்லா வழிகளிலும், எந்த நேரத்திலும் எல்லா மக்களுக்கும் உன்னால் முடிந்த எல்லா நன்மைகளையும் செய். (ஜோன் வெஸ்லி) நாம் நமது செயல்களைத் தீர்மானிக்கும் அளவுக்குத் தகுந்தபடிதான், நமது செயல்கள் நம்மைப்பற்றிப் பிறர் தீர்மானிக்கச் செய்கின்றது. (ஜோர்ஜ் எலியட்) எந்த மனிதனும் அவன் ஏதேனும் பெற்றதற்காக் கௌரவிக்கப்படுவதில்லை. ஆனால் அவன் ஏதேனும் கொடுத்ததற்காக் கௌரவிக்கப்படுகிறான். (கோல்ரிட்ஜ்)புதிய இந்தியா ஒருபுறம் சொல்கிறது… ’மேலை நாடுகள் செய்வது நிச்சயம் சரியாகத்தான் இருக்கும். இல்லாவிட்டால் அவை எப்படி இவ்வளவு பெருமை உடையவையாக ஆகியிருக்க முடியும?’ மறுபுறம் பழைய இந்தியா சொல்கிறது…. ’மின்னலின் ஒளி மிகவும் நன்றாகத்தான் பிரகாசிக்கும். ஆனாலும் அது ஒரு கணம்தான். குழந்தைகளே உங்கள் கண்களை அது கூசச் செய்வதைக் கவனியுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்.’ (சுவாமி விவேகானந்தர்) உலக வரலாற்றைப் படிப்பதைவிட, உலகில் வரலாறு படைப்பதே அதிக இனிமையை உருவாக்குகிறது.(ஜவகர்லால் நேரு)புதிய இந்தியா ஒரு புறம் சொல்கிறது… ’மேலை நாட்டுக் கருத்துக்கள், மொழி, உணவு, உடை, நடைமுறைகள் ஆகியவற்றை நாம் பின்பற்றினால்தான் மேலை நாட்டவர்களைப் போன்று நாமும் உறுதியும் ஆற்றலும் உடையவர்கள் ஆவோம்.’ மறுபுறம் பழைய இந்தியா சொல்கிறது….’ முட்டாள்கள்! மற்றவர்களுடைய கருத்துக்களைக் குரட்டுத்தனமாகப் பின்பற்றுவதனால் ஒருநாளும் அவை ஒருவனுக்குச் சொந்தமாகிவிடா. உழைத்துப் பெற்றாலன்றி எதுவும் உனக்குச் சொந்தமாகி விடாது. புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு, புலியாகிவிடுமா?’ (சுவாமி விவேகானந்தர்)இருப்பதும், சிறப்பதும், அதிகாரம் செய்வதும், அடங்கி நடப்பதும், உழைப்பதும், பிழைப்பதும் மட்டுமே போதுமா? இவற்றில நீதி நிலைத்திருக்க வேண்டாமா? நீதி இல்லாமல் இவைகளைச் செய்தால் துன்பமே உண்டாகும். இயற்கைக்கு விரோதமாக நீதி தவறி நடப்பவனுக்கு இறைவனுடைய தண்டனை நிச்சயமாக உண்டு. (இந்து தர்ம சாத்திரம்) நியாயமானதை மட்டுமே செய்வதற்கு உரிமை உண்டேயன்றி, தனக்கு இஷ்டப்பட்டதைச் செய்வதற்கு யாருக்குமே உரிமையில்லை. (சார்ல்ஸ் சிம்மன்ஸ்)
எந்தச் செயலையும் செய்யத் தொடங்குவதற்கு முன்னர் உன் விவேகத்தைப் பயன்படுத்திக்கொள். பொறுமை தானாக வளரும். நீ மற்றவர்களுடன் பேசும் நல்ல சொற்கள், உனது சீலத்தை நிர்ணயிக்கின்றன. நீ பேசும் வரவேற்புரைகள் உன்னுடைய பணிவை வெளிப்படுத்துகின்றன. நீ மற்றவர்களைக் கௌரவித்துப் பேசுகின்ற சொற்கள், நீ மற்றவர்களிடம் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையினையும் வெளிப்படுத்துகின்றன. இன்றைய தருணத்தை நீ கவனத்துடன் பராமரித்தால் நாளைய தினம் நன்றாக அமையும். (சத்யசாயி பாபா)
துன்பங்கள் நமக்கு வருவதெல்லாம் நமது மனதைச் சமநிலையில் வைத்துக் கொள்வதற்காகத்தான். வருத்தம் கொடுப்பதற்காக அல்ல. மற்றும் நம்மைப் புத்திசாலி ஆக்கத்தான். நமது மனதைப் புண்படுத்த அல்ல. (ஹென்றி வார்ட் பீச்சர்) உலகம் தருகின்ற எந்த மகிழ்ச்சியையும், உலகம் திரும்பவும் எடுத்துக் கொள்ளும். (பைரஸ்) தொந்தரவுகளினால் சங்கடப்படுவது உன்னுடைய தொந்தரவுகளை இரட்டிப்பு ஆக்குவது போலாகும். (பீபர்)
உண்மையையும், பொய்யையும் அதன் பாகுபாடு கண்டு பிரித்து அறியும் ஞானத்தைக் கடவுள் எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றார். இதில் நீ எதையும் தெரிந்தெடுக்கலாம். ஆனால் ஏதாவது ஒன்றைத்தான் ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியும். இரண்டையும் ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியாது. (எமர்சன்) உண்மை உயர்வை அளிக்கும். பொய்மை உயர்வை அழிக்கும். (பழமொழி)சத்தியம்(உண்மை)தான் தந்தை, அன்புதான் தாய், அமைதி சகோதரி, புத்தி நமது சகோதரன். (சாயி பாபா)அதிர்ஷ்டம் மிக அபூர்வமாகத்தான் நமது கதவைத் தட்டும். சாதாரணமாகத் திறந்து கிடக்கும் கதவு வழியாக உள்ளே நுளைந்துவிட்டுச் சத்தமில்லாமல் வெளியே நழுவிவிடும். (டோவ் லார்சன்) ஒரே சமயத்தில் அதிர்ஷ்டமும் நல்ல புத்தியும் மனிதர்களுக்கு ஆசீர்வாதம் செய்யப்படுவதில்லை.(லோவல்)அதிர்ஷ்டம் பலவீனமானவர்களுக்கு குழி. வலியோர்களுக்குத் தூண் (லோவல்) அதிர்ஷ்டத்தை நம்பி அனைத்தையும் விற்றுவிடாதே! (பழமொழி).
கணவனின் அடிமையல்ல மனைவி. அவனது மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் பங்காளியாக இருந்து, அவனைப் போலவே சுதந்திரமும் உரிமையும் உடையவளாக இருக்கும் பொழுதுதான் குடும்ப வாழ்வு மகிழ்ச்சியுடன் அமைகிறது. (காண்டேகர்) ஆண்களுக்கு ஓர் சொல்!!! உலகம் முழுவதையும் உன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அதனை ஆளும் அரசனாக இருப்பதைவிட, ஒரு பெண்ணின் சிறந்த மனதில் அரசர்க்கரசனாக இருப்பது மேல். (இங்கர்சால்) மனைவி ஒரு வீணை அல்ல; வாசித்து முடிந்த பின்னர் சுவரில் சாய்த்து வைப்பதற்கு. (பழமொழி)
மக்களிடையே உண்மையான சமத்துவம் என்பது எப்போதுமே இருந்ததில்லை. இனி இருக்கப் போவதும் இல்லை. அப்படிப்பட்ட சாத்தியமில்லாத ஒரு சமத்துவம் மரணத்தையே குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையில் வேறுபாட்டை எது உண்டாக்குகிறது? நாம் அனைவரும் ஒரே அளவிலான அறிவாற்றலுடன்தான் பிறந்திருக் கின்றோமென்று தற்காலத்தில் பைத்தியக்காரனைத் தவிர வேறு எவரும் சொல்ல மாட்டார்கள். (சுவாமி விவேகானந்தர்) சமநோக்கு இனிமையைத் தருகிறது. இதன் உண்மையை ஒவ்வொரு கணமும் அனுபவத்தில் காணுகின்றோம்(மகாத்மா காந்தி – 24-05-1945)இறைவனால் மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற அளவற்ற நன்மைகள் எல்லாவற்றிலும் மேலானது சிந்திக்கும் சக்தியாகும். அதிலும் எதைப்பற்றியும் சிந்தித்துத் தீர்மானத்திற்கு வரக்கூடிய சக்தியே மிக உயர்ந்தது எனலாம். ஆகையால் நீங்கள் மேற்கொள்ளும் எந்த வேலையானாலும்சரி அந்த வேலையைப் பற்றிய உங்களின் தீர்மானம் சரியானதாக இருக்கட்டும். அப்பொழுது தான் இறைவன் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பார். (இந்து தர்ம சாத்திரம்)
இன்றைய விஞ்ஞான முன்னேற்றங்கள் பேராசையைத்தான் தூண்டி விடுகின்றன. ஆசைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமாகத்தான் மனஅமைதியையும், திருப்தியையும் பெற முடியும். உலகிலே எதுவும் நிரந்தரமல்ல. அந்தஸ்து, அதிகாரம், பதவி யாவும் நிலையில்லாதவை. இவற்றில் பற்று வைத்துக்கொண்டு இறைவனைத்தேடி எங்கு சென்றாலும் இறைவன் தென்படமாட்டார். (சத்யசாயி பாபா)
இழுத்தடிக்கும் வேலை உன்னைப் பாழாக்கும். வேலையும் வீணாகும். எல்லா வேளையிலும் விரைந்து செயலாற்று: நல்லதே நடக்கும். (றோபேட் சவுத்வேல்) சிறிய செலவுகள்தாமே என்று அலட்சியமாக இருக்காதீர்கள். சிறிய ஓட்டை பெரிய கப்பலையும் முழ்கடித்துவிடும். (பிராங்கிலின்) ஒரு நிமிடம் தாமதிப்பதை விட மூன்று மணி நேரம் முன்னதாக இருப்பது நல்லது. (ஷேக்ஸ்பியர்) வழுக்கை விழுந்தபின் வாழ்க்கையில் கிடைக்கும் சீப்பு தான் அனுபவம். (ஐரிஷ் பழமொழி)
பெண்களின் நடை, உடை, பாவனை, அளவுக்கதிகமான அலங்காரம் போன்றவைகள்தாம் ஆடவர்களின் சிருங்கார சேஷ்டைகளுக்குக் காரணமாக இருப்பதால், இதுபோன்ற விடங்களில் பெண்கள் சாதாரணமான அலங்காரத்துடன் இருக்கவேண்டியது அவசியம். மூடனாக இருப்பவன்கூட காமத்திற்கு விதிவிலக்கல்ல என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதால் பெண்கள் காரணமின்றித் தங்களை மிதமாக அழகுபடுத்திக் கொள்ளக்கூடாது. சாஸ்திரங்களை மீறுவதும்கூட பாவமான செயல்தான். (இந்துதர்ம சாத்திரம்)உன்னால் மற்றவர்களுக்குச் செய்யப்பட்ட நன்மைகளை மறந்தவிடு. மற்றவர்கள் உனக்குச் செய்த தீமைகளையும் மறந்துவிடு. உன்னிடம் அன்பை வளர்த்துக்கொள். மற்றவர்களுக்கு உதவிசெய். அடுத்தவர்களை ஒருபோதும் துன்புறுத்தாதே! சுயநலம் இருக்கும்வரை, மனிதனிடமிருக்கும் நல்ல குணநலன்கள் வெளிப்படமாட்டா. அதன்காரணமாக அவனிடம் உயர் சீலமும் இருக்கமுடியாது. ஒருவனது நன்னடத்தையே அவனுடைய உண்மையான வலிமையாகும். நன்னடத்தையுடன் வாழ்பவனுக்கே இறைவன் அருள்பாலிக்கின்றார். (சத்யசாயி பாபா)முயற்சியுடன் செயற்படுபவர்களை மாத்திரமே வெற்றி தழுவும். பின் விளைவுகளுக்கு அஞ்சும் கோழைகளைத் தேடி வெற்றி செல்லாது. (ஜவகர்லால் நேரு) ஒரு மனிதன் பலமுறை தோற்கலாம். ஆனால் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், இன்னொருவரைக் காரணமாகக் காட்டத் தொடங்கும் பொழுது அவன் வெற்றி வாய்ப்பை இழக்கிறான். (பபல்லோ) வெற்றி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும் போட்டியில் கலந்து கொள்ளாதீர். போட்டியிடுவதற்காகவே போட்டியில் பங்குபெறுவீர். (ஜோர்ஜ் ஹெர்பட்)
எந்தச் செயலையும் செய்யத் தொடங்குவதற்கு முன்னர் உன் விவேகத்தைப் பயன்படுத்திக்கொள். பொறுமை தானாக வளரும். நீ மற்றவர்களுடன் பேசும் நல்ல சொற்கள், உனது சீலத்தை நிர்ணயிக்கின்றன. நீ பேசும் வரவேற்புரைகள் உன்னுடைய பணிவை வெளிப்படுத்துகின்றன. நீ மற்றவர்களைக் கௌரவித்துப் பேசுகின்ற சொற்கள், நீ மற்றவர்களிடம் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையினையும் வெளிப்படுத்துகின்றன. இன்றைய தருணத்தை நீ கவனத்துடன் பராமரித்தால் நாளைய தினம் நன்றாக அமையும். (சத்யசாயி பாபா)
துன்பங்கள் நமக்கு வருவதெல்லாம் நமது மனதைச் சமநிலையில் வைத்துக் கொள்வதற்காகத்தான். வருத்தம் கொடுப்பதற்காக அல்ல. மற்றும் நம்மைப் புத்திசாலி ஆக்கத்தான். நமது மனதைப் புண்படுத்த அல்ல. (ஹென்றி வார்ட் பீச்சர்) உலகம் தருகின்ற எந்த மகிழ்ச்சியையும், உலகம் திரும்பவும் எடுத்துக் கொள்ளும். (பைரஸ்) தொந்தரவுகளினால் சங்கடப்படுவது உன்னுடைய தொந்தரவுகளை இரட்டிப்பு ஆக்குவது போலாகும். (பீபர்)
உண்மையையும், பொய்யையும் அதன் பாகுபாடு கண்டு பிரித்து அறியும் ஞானத்தைக் கடவுள் எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றார். இதில் நீ எதையும் தெரிந்தெடுக்கலாம். ஆனால் ஏதாவது ஒன்றைத்தான் ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியும். இரண்டையும் ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியாது. (எமர்சன்) உண்மை உயர்வை அளிக்கும். பொய்மை உயர்வை அழிக்கும். (பழமொழி)சத்தியம்(உண்மை)தான் தந்தை, அன்புதான் தாய், அமைதி சகோதரி, புத்தி நமது சகோதரன். (சாயி பாபா)அதிர்ஷ்டம் மிக அபூர்வமாகத்தான் நமது கதவைத் தட்டும். சாதாரணமாகத் திறந்து கிடக்கும் கதவு வழியாக உள்ளே நுளைந்துவிட்டுச் சத்தமில்லாமல் வெளியே நழுவிவிடும். (டோவ் லார்சன்) ஒரே சமயத்தில் அதிர்ஷ்டமும் நல்ல புத்தியும் மனிதர்களுக்கு ஆசீர்வாதம் செய்யப்படுவதில்லை.(லோவல்)அதிர்ஷ்டம் பலவீனமானவர்களுக்கு குழி. வலியோர்களுக்குத் தூண் (லோவல்) அதிர்ஷ்டத்தை நம்பி அனைத்தையும் விற்றுவிடாதே! (பழமொழி).
கணவனின் அடிமையல்ல மனைவி. அவனது மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் பங்காளியாக இருந்து, அவனைப் போலவே சுதந்திரமும் உரிமையும் உடையவளாக இருக்கும் பொழுதுதான் குடும்ப வாழ்வு மகிழ்ச்சியுடன் அமைகிறது. (காண்டேகர்) ஆண்களுக்கு ஓர் சொல்!!! உலகம் முழுவதையும் உன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அதனை ஆளும் அரசனாக இருப்பதைவிட, ஒரு பெண்ணின் சிறந்த மனதில் அரசர்க்கரசனாக இருப்பது மேல். (இங்கர்சால்) மனைவி ஒரு வீணை அல்ல; வாசித்து முடிந்த பின்னர் சுவரில் சாய்த்து வைப்பதற்கு. (பழமொழி)
மக்களிடையே உண்மையான சமத்துவம் என்பது எப்போதுமே இருந்ததில்லை. இனி இருக்கப் போவதும் இல்லை. அப்படிப்பட்ட சாத்தியமில்லாத ஒரு சமத்துவம் மரணத்தையே குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையில் வேறுபாட்டை எது உண்டாக்குகிறது? நாம் அனைவரும் ஒரே அளவிலான அறிவாற்றலுடன்தான் பிறந்திருக் கின்றோமென்று தற்காலத்தில் பைத்தியக்காரனைத் தவிர வேறு எவரும் சொல்ல மாட்டார்கள். (சுவாமி விவேகானந்தர்) சமநோக்கு இனிமையைத் தருகிறது. இதன் உண்மையை ஒவ்வொரு கணமும் அனுபவத்தில் காணுகின்றோம்(மகாத்மா காந்தி – 24-05-1945)இறைவனால் மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற அளவற்ற நன்மைகள் எல்லாவற்றிலும் மேலானது சிந்திக்கும் சக்தியாகும். அதிலும் எதைப்பற்றியும் சிந்தித்துத் தீர்மானத்திற்கு வரக்கூடிய சக்தியே மிக உயர்ந்தது எனலாம். ஆகையால் நீங்கள் மேற்கொள்ளும் எந்த வேலையானாலும்சரி அந்த வேலையைப் பற்றிய உங்களின் தீர்மானம் சரியானதாக இருக்கட்டும். அப்பொழுது தான் இறைவன் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பார். (இந்து தர்ம சாத்திரம்)
இன்றைய விஞ்ஞான முன்னேற்றங்கள் பேராசையைத்தான் தூண்டி விடுகின்றன. ஆசைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமாகத்தான் மனஅமைதியையும், திருப்தியையும் பெற முடியும். உலகிலே எதுவும் நிரந்தரமல்ல. அந்தஸ்து, அதிகாரம், பதவி யாவும் நிலையில்லாதவை. இவற்றில் பற்று வைத்துக்கொண்டு இறைவனைத்தேடி எங்கு சென்றாலும் இறைவன் தென்படமாட்டார். (சத்யசாயி பாபா)
இழுத்தடிக்கும் வேலை உன்னைப் பாழாக்கும். வேலையும் வீணாகும். எல்லா வேளையிலும் விரைந்து செயலாற்று: நல்லதே நடக்கும். (றோபேட் சவுத்வேல்) சிறிய செலவுகள்தாமே என்று அலட்சியமாக இருக்காதீர்கள். சிறிய ஓட்டை பெரிய கப்பலையும் முழ்கடித்துவிடும். (பிராங்கிலின்) ஒரு நிமிடம் தாமதிப்பதை விட மூன்று மணி நேரம் முன்னதாக இருப்பது நல்லது. (ஷேக்ஸ்பியர்) வழுக்கை விழுந்தபின் வாழ்க்கையில் கிடைக்கும் சீப்பு தான் அனுபவம். (ஐரிஷ் பழமொழி)
எல்லா இனத்தையும் சமமாகவே கருதுங்கள். மக்கள் சமுதாயத்திடம் அன்பும் ஆதரவும் கொண்டு வாழுங்கள். ’எல்லாத்திசைகளில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் எனக்கு நண்பர்களாக இருக்கவேண்டும்’ என்று பிரார்த்தனை செய்யுங்கள். (இந்து தர்ம சாத்திரம்) அன்பு ஒருபோதும் வேண்டுவதில்லை; அது எப்பொழுதும் கொடுப்பது. அன்பு எப்பொழுதும் கஷ்டப்படுவது, ஆத்திரப்படுவதில்லை. தானே பழி செய்வதுமில்லை. (காந்தி) ’வீணாய்ப்போன அன்பு’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்! அன்பு என்றுமே வீணாவதில்லை. (லாங்பெல்லோ
ஒரு மருத்துவருடைய கீர்த்தியானது, அவர் பாதுகாப்பின்போது இறந்துபோன புகழ்பெற்றவர்களின் எண்ணிக்கையைக் கொண்டே கணிப்பிடப்படுகிறது. (பெர்னாட் ஷா) கீர்த்திக்குத் தகுதியில்லாமல் அதைப் பெறுவதைக் காட்டிலும், கீர்த்திக்குத் தகுதியாயிருந்தும் அதைப் பெறாமலிருப்பது சிறந்தது. (மார்க் ட்வெய்ன்) உழைக்கவும், அதன்பின் அந்த உழைப்பின் விளைவுக்காகக் காத்திருக்கவும் கற்றுக்கொள்(லோங் பெல்லோ) மரியாதையும், ஆதாயமும் ஒரே பையில் தங்குவதில்லை (பழமொழி)உலகில் சொல்லப்பட்டவைகளில் நல்லவற்றை எல்லாம் கற்றுக் கொள்வதே உயர்ந்த கலாச்சாரம்.(மத்தியூ ஆர்னோல்ட்) கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விடயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. வாழ்க்கையை உருவாக்கக்கூடிய, மனிதனை மனிதனாக்கக் கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக் கூடிய கருத்துக்களைக் கிரகித்து அவற்றை நாம் நம்முடையவைகளாக ஆக்கிக் கொள்வதே கல்வி என்பதாகும். (சுவாமி விவேகானந்தர்) பள்ளிக் கதவைத் திறப்பவன் சிறைச்சாலைக் கதவை மூடுவான். (விக்டர் ஹ்யூகோ) அரைகுறைப் படிப்பு அதிக ஆபத்து. (போப்)
No comments:
Post a Comment