சங்காபிஷேகம்
***************************************************************
சங்காபிஷேகம்
08.07.2012 (ஞாயிற்றுகிழமை)
வைரவர் உற்சவம்
முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மூலமூர்த்தியாக வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் விளங்குகின்றார் பரிவார மூர்த்திகளாகப் பிள்ளையார் வயிரவர் நவக்கிரகம் ஐயனார் மயூரம் பலிபீடம் ஆகியன காணப்படுகின்றன. இக்கோயிலின் மணிக்கூட்டு கோபுரமும் காண்டாமணியும் வெகு சிறப்பானமுறையில் அமைந்துள்ளன.
திருக்கல்யாணம்

தீர்த்த திருவிழா

தேர் திருவிழா

வேட்டை திருவிழா

7ஆம் திருவிழா

6ஆம் திருவிழா

5ஆம் திருவிழா

4ஆம் திருவிழா

3ஆம் திருவிழா

2ஆம் திருவிழா

கொடியேற்றம்
மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய போது
முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மூலமூர்த்தியாக வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் விளங்குகின்றார் பரிவார மூர்த்திகளாகப் பிள்ளையார் வயிரவர் நவக்கிரகம் ஐயனார் மயூரம் பலிபீடம் ஆகியன காணப்படுகின்றன. இக்கோயிலின் மணிக்கூட்டு கோபுரமும் காண்டாமணியும் வெகு சிறப்பானமுறையில் அமைந்துள்ளன.
நாளுமொரு நற்சிந்தனை 01
ஜீவன் பிரிந்து போகும்போது எந்தச் சரீரத்தை நினைத்துக் கொண்டிருந்ததோ அந்தச் சரீரத்தையே அடைகிறது. ஆகவே பக்திமுறை மிகவும் அவசியமானது. இடைவிடாத தியானத்தினால் மனதில் உலக எண்ணம் ஏற்படாதிருக்கும்போது ஜீவனிடத்தில் இறைவன் எண்ணமே நிறைந்திருக்கும். இறைவனிடத்தில் பக்தியல்லாத குறையினால்தான் மனிதன் துன்பப்படுகிறான். கடைசிக் காலத்தில் இறைவனுடைய எண்ணம் உண்டாகும்படியான வழிகளை மனிதன் அனுசரிக்க வேண்டும்.(இராமகிருஷ்ண பரமஹம்ஸர்)
பெண்களின் நடை, உடை, பாவனை, அளவுக்கதிகமான அலங்காரம் போன்றவைகள்தாம் ஆடவர்களின் சிருங்கார சேஷ்டைகளுக்குக் காரணமாக இருப்பதால், இதுபோன்ற விடங்களில் பெண்கள் சாதாரணமான அலங்காரத்துடன் இருக்கவேண்டியது அவசியம். மூடனாக இருப்பவன்கூட காமத்திற்கு விதிவிலக்கல்ல என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதால் பெண்கள் காரணமின்றித் தங்களை மிதமாக அழகுபடுத்திக் கொள்ளக்கூடாது. சாஸ்திரங்களை மீறுவதும்கூட பாவமான செயல்தான். (இந்துதர்ம சாத்திரம்)உன்னால் மற்றவர்களுக்குச் செய்யப்பட்ட நன்மைகளை மறந்தவிடு. மற்றவர்கள் உனக்குச் செய்த தீமைகளையும் மறந்துவிடு. உன்னிடம் அன்பை வளர்த்துக்கொள். மற்றவர்களுக்கு உதவிசெய். அடுத்தவர்களை ஒருபோதும் துன்புறுத்தாதே! சுயநலம் இருக்கும்வரை, மனிதனிடமிருக்கும் நல்ல குணநலன்கள் வெளிப்படமாட்டா. அதன்காரணமாக அவனிடம் உயர் சீலமும் இருக்கமுடியாது. ஒருவனது நன்னடத்தையே அவனுடைய உண்மையான வலிமையாகும். நன்னடத்தையுடன் வாழ்பவனுக்கே இறைவன் அருள்பாலிக்கின்றார். (சத்யசாயி பாபா)முயற்சியுடன் செயற்படுபவர்களை மாத்திரமே வெற்றி தழுவும். பின் விளைவுகளுக்கு அஞ்சும் கோழைகளைத் தேடி வெற்றி செல்லாது. (ஜவகர்லால் நேரு) ஒரு மனிதன் பலமுறை தோற்கலாம். ஆனால் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், இன்னொருவரைக் காரணமாகக் காட்டத் தொடங்கும் பொழுது அவன் வெற்றி வாய்ப்பை இழக்கிறான். (பபல்லோ) வெற்றி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும் போட்டியில் கலந்து கொள்ளாதீர். போட்டியிடுவதற்காகவே போட்டியில் பங்குபெறுவீர். (ஜோர்ஜ் ஹெர்பட்)
ஒரு சிறந்த மனிதனுக்கு மூன்று அறிகுறிகள் உள்ளன. நல்லொழுக்கத்துடன் இருப்பதால் விசாரமில்லாமல் இருக்கிறான். அறிவோடு இருப்பதால் மனக்கலக்கமில்லாமல் இருக்கிறான். தைரியமாக இருப்பதால் பயமின்றி இருக்கிறான். (கன்பூஸியஸ்) வாயிலிருந்து வரும் சொற்கள் தான் ஒருவனுடைய உடைகள். அவைகளைக் கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தவேண்டாமே. (செஸ்டர் பீல்ட்) ஒருவனை எப்படி அளவிட வேண்டுமென்று தெரிந்து கொண்டால், ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகமே.(வில்லியம் எல்லேரி சேனிங்)எல்லா இடங்களிலும், எல்லா வழிகளிலும், எந்த நேரத்திலும் எல்லா மக்களுக்கும் உன்னால் முடிந்த எல்லா நன்மைகளையும் செய். (ஜோன் வெஸ்லி) நாம் நமது செயல்களைத் தீர்மானிக்கும் அளவுக்குத் தகுந்தபடிதான், நமது செயல்கள் நம்மைப்பற்றிப் பிறர் தீர்மானிக்கச் செய்கின்றது. (ஜோர்ஜ் எலியட்) எந்த மனிதனும் அவன் ஏதேனும் பெற்றதற்காக் கௌரவிக்கப்படுவதில்லை. ஆனால் அவன் ஏதேனும் கொடுத்ததற்காக் கௌரவிக்கப்படுகிறான். (கோல்ரிட்ஜ்)புதிய இந்தியா ஒருபுறம் சொல்கிறது… ’மேலை நாடுகள் செய்வது நிச்சயம் சரியாகத்தான் இருக்கும். இல்லாவிட்டால் அவை எப்படி இவ்வளவு பெருமை உடையவையாக ஆகியிருக்க முடியும?’ மறுபுறம் பழைய இந்தியா சொல்கிறது…. ’மின்னலின் ஒளி மிகவும் நன்றாகத்தான் பிரகாசிக்கும். ஆனாலும் அது ஒரு கணம்தான். குழந்தைகளே உங்கள் கண்களை அது கூசச் செய்வதைக் கவனியுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்.’ (சுவாமி விவேகானந்தர்) உலக வரலாற்றைப் படிப்பதைவிட, உலகில் வரலாறு படைப்பதே அதிக இனிமையை உருவாக்குகிறது.(ஜவகர்லால் நேரு)புதிய இந்தியா ஒரு புறம் சொல்கிறது… ’மேலை நாட்டுக் கருத்துக்கள், மொழி, உணவு, உடை, நடைமுறைகள் ஆகியவற்றை நாம் பின்பற்றினால்தான் மேலை நாட்டவர்களைப் போன்று நாமும் உறுதியும் ஆற்றலும் உடையவர்கள் ஆவோம்.’ மறுபுறம் பழைய இந்தியா சொல்கிறது….’ முட்டாள்கள்! மற்றவர்களுடைய கருத்துக்களைக் குரட்டுத்தனமாகப் பின்பற்றுவதனால் ஒருநாளும் அவை ஒருவனுக்குச் சொந்தமாகிவிடா. உழைத்துப் பெற்றாலன்றி எதுவும் உனக்குச் சொந்தமாகி விடாது. புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு, புலியாகிவிடுமா?’ (சுவாமி விவேகானந்தர்)இருப்பதும், சிறப்பதும், அதிகாரம் செய்வதும், அடங்கி நடப்பதும், உழைப்பதும், பிழைப்பதும் மட்டுமே போதுமா? இவற்றில நீதி நிலைத்திருக்க வேண்டாமா? நீதி இல்லாமல் இவைகளைச் செய்தால் துன்பமே உண்டாகும். இயற்கைக்கு விரோதமாக நீதி தவறி நடப்பவனுக்கு இறைவனுடைய தண்டனை நிச்சயமாக உண்டு. (இந்து தர்ம சாத்திரம்) நியாயமானதை மட்டுமே செய்வதற்கு உரிமை உண்டேயன்றி, தனக்கு இஷ்டப்பட்டதைச் செய்வதற்கு யாருக்குமே உரிமையில்லை. (சார்ல்ஸ் சிம்மன்ஸ்)
எந்தச் செயலையும் செய்யத் தொடங்குவதற்கு முன்னர் உன் விவேகத்தைப் பயன்படுத்திக்கொள். பொறுமை தானாக வளரும். நீ மற்றவர்களுடன் பேசும் நல்ல சொற்கள், உனது சீலத்தை நிர்ணயிக்கின்றன. நீ பேசும் வரவேற்புரைகள் உன்னுடைய பணிவை வெளிப்படுத்துகின்றன. நீ மற்றவர்களைக் கௌரவித்துப் பேசுகின்ற சொற்கள், நீ மற்றவர்களிடம் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையினையும் வெளிப்படுத்துகின்றன. இன்றைய தருணத்தை நீ கவனத்துடன் பராமரித்தால் நாளைய தினம் நன்றாக அமையும். (சத்யசாயி பாபா)
துன்பங்கள் நமக்கு வருவதெல்லாம் நமது மனதைச் சமநிலையில் வைத்துக் கொள்வதற்காகத்தான். வருத்தம் கொடுப்பதற்காக அல்ல. மற்றும் நம்மைப் புத்திசாலி ஆக்கத்தான். நமது மனதைப் புண்படுத்த அல்ல. (ஹென்றி வார்ட் பீச்சர்) உலகம் தருகின்ற எந்த மகிழ்ச்சியையும், உலகம் திரும்பவும் எடுத்துக் கொள்ளும். (பைரஸ்) தொந்தரவுகளினால் சங்கடப்படுவது உன்னுடைய தொந்தரவுகளை இரட்டிப்பு ஆக்குவது போலாகும். (பீபர்)
உண்மையையும், பொய்யையும் அதன் பாகுபாடு கண்டு பிரித்து அறியும் ஞானத்தைக் கடவுள் எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றார். இதில் நீ எதையும் தெரிந்தெடுக்கலாம். ஆனால் ஏதாவது ஒன்றைத்தான் ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியும். இரண்டையும் ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியாது. (எமர்சன்) உண்மை உயர்வை அளிக்கும். பொய்மை உயர்வை அழிக்கும். (பழமொழி)சத்தியம்(உண்மை)தான் தந்தை, அன்புதான் தாய், அமைதி சகோதரி, புத்தி நமது சகோதரன். (சாயி பாபா)அதிர்ஷ்டம் மிக அபூர்வமாகத்தான் நமது கதவைத் தட்டும். சாதாரணமாகத் திறந்து கிடக்கும் கதவு வழியாக உள்ளே நுளைந்துவிட்டுச் சத்தமில்லாமல் வெளியே நழுவிவிடும். (டோவ் லார்சன்) ஒரே சமயத்தில் அதிர்ஷ்டமும் நல்ல புத்தியும் மனிதர்களுக்கு ஆசீர்வாதம் செய்யப்படுவதில்லை.(லோவல்)அதிர்ஷ்டம் பலவீனமானவர்களுக்கு குழி. வலியோர்களுக்குத் தூண் (லோவல்) அதிர்ஷ்டத்தை நம்பி அனைத்தையும் விற்றுவிடாதே! (பழமொழி).
கணவனின் அடிமையல்ல மனைவி. அவனது மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் பங்காளியாக இருந்து, அவனைப் போலவே சுதந்திரமும் உரிமையும் உடையவளாக இருக்கும் பொழுதுதான் குடும்ப வாழ்வு மகிழ்ச்சியுடன் அமைகிறது. (காண்டேகர்) ஆண்களுக்கு ஓர் சொல்!!! உலகம் முழுவதையும் உன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அதனை ஆளும் அரசனாக இருப்பதைவிட, ஒரு பெண்ணின் சிறந்த மனதில் அரசர்க்கரசனாக இருப்பது மேல். (இங்கர்சால்) மனைவி ஒரு வீணை அல்ல; வாசித்து முடிந்த பின்னர் சுவரில் சாய்த்து வைப்பதற்கு. (பழமொழி)
மக்களிடையே உண்மையான சமத்துவம் என்பது எப்போதுமே இருந்ததில்லை. இனி இருக்கப் போவதும் இல்லை. அப்படிப்பட்ட சாத்தியமில்லாத ஒரு சமத்துவம் மரணத்தையே குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையில் வேறுபாட்டை எது உண்டாக்குகிறது? நாம் அனைவரும் ஒரே அளவிலான அறிவாற்றலுடன்தான் பிறந்திருக் கின்றோமென்று தற்காலத்தில் பைத்தியக்காரனைத் தவிர வேறு எவரும் சொல்ல மாட்டார்கள். (சுவாமி விவேகானந்தர்) சமநோக்கு இனிமையைத் தருகிறது. இதன் உண்மையை ஒவ்வொரு கணமும் அனுபவத்தில் காணுகின்றோம்(மகாத்மா காந்தி – 24-05-1945)இறைவனால் மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற அளவற்ற நன்மைகள் எல்லாவற்றிலும் மேலானது சிந்திக்கும் சக்தியாகும். அதிலும் எதைப்பற்றியும் சிந்தித்துத் தீர்மானத்திற்கு வரக்கூடிய சக்தியே மிக உயர்ந்தது எனலாம். ஆகையால் நீங்கள் மேற்கொள்ளும் எந்த வேலையானாலும்சரி அந்த வேலையைப் பற்றிய உங்களின் தீர்மானம் சரியானதாக இருக்கட்டும். அப்பொழுது தான் இறைவன் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பார். (இந்து தர்ம சாத்திரம்)
இன்றைய விஞ்ஞான முன்னேற்றங்கள் பேராசையைத்தான் தூண்டி விடுகின்றன. ஆசைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமாகத்தான் மனஅமைதியையும், திருப்தியையும் பெற முடியும். உலகிலே எதுவும் நிரந்தரமல்ல. அந்தஸ்து, அதிகாரம், பதவி யாவும் நிலையில்லாதவை. இவற்றில் பற்று வைத்துக்கொண்டு இறைவனைத்தேடி எங்கு சென்றாலும் இறைவன் தென்படமாட்டார். (சத்யசாயி பாபா)
இழுத்தடிக்கும் வேலை உன்னைப் பாழாக்கும். வேலையும் வீணாகும். எல்லா வேளையிலும் விரைந்து செயலாற்று: நல்லதே நடக்கும். (றோபேட் சவுத்வேல்) சிறிய செலவுகள்தாமே என்று அலட்சியமாக இருக்காதீர்கள். சிறிய ஓட்டை பெரிய கப்பலையும் முழ்கடித்துவிடும். (பிராங்கிலின்) ஒரு நிமிடம் தாமதிப்பதை விட மூன்று மணி நேரம் முன்னதாக இருப்பது நல்லது. (ஷேக்ஸ்பியர்) வழுக்கை விழுந்தபின் வாழ்க்கையில் கிடைக்கும் சீப்பு தான் அனுபவம். (ஐரிஷ் பழமொழி)
பெண்களின் நடை, உடை, பாவனை, அளவுக்கதிகமான அலங்காரம் போன்றவைகள்தாம் ஆடவர்களின் சிருங்கார சேஷ்டைகளுக்குக் காரணமாக இருப்பதால், இதுபோன்ற விடங்களில் பெண்கள் சாதாரணமான அலங்காரத்துடன் இருக்கவேண்டியது அவசியம். மூடனாக இருப்பவன்கூட காமத்திற்கு விதிவிலக்கல்ல என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதால் பெண்கள் காரணமின்றித் தங்களை மிதமாக அழகுபடுத்திக் கொள்ளக்கூடாது. சாஸ்திரங்களை மீறுவதும்கூட பாவமான செயல்தான். (இந்துதர்ம சாத்திரம்)உன்னால் மற்றவர்களுக்குச் செய்யப்பட்ட நன்மைகளை மறந்தவிடு. மற்றவர்கள் உனக்குச் செய்த தீமைகளையும் மறந்துவிடு. உன்னிடம் அன்பை வளர்த்துக்கொள். மற்றவர்களுக்கு உதவிசெய். அடுத்தவர்களை ஒருபோதும் துன்புறுத்தாதே! சுயநலம் இருக்கும்வரை, மனிதனிடமிருக்கும் நல்ல குணநலன்கள் வெளிப்படமாட்டா. அதன்காரணமாக அவனிடம் உயர் சீலமும் இருக்கமுடியாது. ஒருவனது நன்னடத்தையே அவனுடைய உண்மையான வலிமையாகும். நன்னடத்தையுடன் வாழ்பவனுக்கே இறைவன் அருள்பாலிக்கின்றார். (சத்யசாயி பாபா)முயற்சியுடன் செயற்படுபவர்களை மாத்திரமே வெற்றி தழுவும். பின் விளைவுகளுக்கு அஞ்சும் கோழைகளைத் தேடி வெற்றி செல்லாது. (ஜவகர்லால் நேரு) ஒரு மனிதன் பலமுறை தோற்கலாம். ஆனால் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், இன்னொருவரைக் காரணமாகக் காட்டத் தொடங்கும் பொழுது அவன் வெற்றி வாய்ப்பை இழக்கிறான். (பபல்லோ) வெற்றி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும் போட்டியில் கலந்து கொள்ளாதீர். போட்டியிடுவதற்காகவே போட்டியில் பங்குபெறுவீர். (ஜோர்ஜ் ஹெர்பட்)
எந்தச் செயலையும் செய்யத் தொடங்குவதற்கு முன்னர் உன் விவேகத்தைப் பயன்படுத்திக்கொள். பொறுமை தானாக வளரும். நீ மற்றவர்களுடன் பேசும் நல்ல சொற்கள், உனது சீலத்தை நிர்ணயிக்கின்றன. நீ பேசும் வரவேற்புரைகள் உன்னுடைய பணிவை வெளிப்படுத்துகின்றன. நீ மற்றவர்களைக் கௌரவித்துப் பேசுகின்ற சொற்கள், நீ மற்றவர்களிடம் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையினையும் வெளிப்படுத்துகின்றன. இன்றைய தருணத்தை நீ கவனத்துடன் பராமரித்தால் நாளைய தினம் நன்றாக அமையும். (சத்யசாயி பாபா)
துன்பங்கள் நமக்கு வருவதெல்லாம் நமது மனதைச் சமநிலையில் வைத்துக் கொள்வதற்காகத்தான். வருத்தம் கொடுப்பதற்காக அல்ல. மற்றும் நம்மைப் புத்திசாலி ஆக்கத்தான். நமது மனதைப் புண்படுத்த அல்ல. (ஹென்றி வார்ட் பீச்சர்) உலகம் தருகின்ற எந்த மகிழ்ச்சியையும், உலகம் திரும்பவும் எடுத்துக் கொள்ளும். (பைரஸ்) தொந்தரவுகளினால் சங்கடப்படுவது உன்னுடைய தொந்தரவுகளை இரட்டிப்பு ஆக்குவது போலாகும். (பீபர்)
உண்மையையும், பொய்யையும் அதன் பாகுபாடு கண்டு பிரித்து அறியும் ஞானத்தைக் கடவுள் எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றார். இதில் நீ எதையும் தெரிந்தெடுக்கலாம். ஆனால் ஏதாவது ஒன்றைத்தான் ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியும். இரண்டையும் ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியாது. (எமர்சன்) உண்மை உயர்வை அளிக்கும். பொய்மை உயர்வை அழிக்கும். (பழமொழி)சத்தியம்(உண்மை)தான் தந்தை, அன்புதான் தாய், அமைதி சகோதரி, புத்தி நமது சகோதரன். (சாயி பாபா)அதிர்ஷ்டம் மிக அபூர்வமாகத்தான் நமது கதவைத் தட்டும். சாதாரணமாகத் திறந்து கிடக்கும் கதவு வழியாக உள்ளே நுளைந்துவிட்டுச் சத்தமில்லாமல் வெளியே நழுவிவிடும். (டோவ் லார்சன்) ஒரே சமயத்தில் அதிர்ஷ்டமும் நல்ல புத்தியும் மனிதர்களுக்கு ஆசீர்வாதம் செய்யப்படுவதில்லை.(லோவல்)அதிர்ஷ்டம் பலவீனமானவர்களுக்கு குழி. வலியோர்களுக்குத் தூண் (லோவல்) அதிர்ஷ்டத்தை நம்பி அனைத்தையும் விற்றுவிடாதே! (பழமொழி).
கணவனின் அடிமையல்ல மனைவி. அவனது மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் பங்காளியாக இருந்து, அவனைப் போலவே சுதந்திரமும் உரிமையும் உடையவளாக இருக்கும் பொழுதுதான் குடும்ப வாழ்வு மகிழ்ச்சியுடன் அமைகிறது. (காண்டேகர்) ஆண்களுக்கு ஓர் சொல்!!! உலகம் முழுவதையும் உன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அதனை ஆளும் அரசனாக இருப்பதைவிட, ஒரு பெண்ணின் சிறந்த மனதில் அரசர்க்கரசனாக இருப்பது மேல். (இங்கர்சால்) மனைவி ஒரு வீணை அல்ல; வாசித்து முடிந்த பின்னர் சுவரில் சாய்த்து வைப்பதற்கு. (பழமொழி)
மக்களிடையே உண்மையான சமத்துவம் என்பது எப்போதுமே இருந்ததில்லை. இனி இருக்கப் போவதும் இல்லை. அப்படிப்பட்ட சாத்தியமில்லாத ஒரு சமத்துவம் மரணத்தையே குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையில் வேறுபாட்டை எது உண்டாக்குகிறது? நாம் அனைவரும் ஒரே அளவிலான அறிவாற்றலுடன்தான் பிறந்திருக் கின்றோமென்று தற்காலத்தில் பைத்தியக்காரனைத் தவிர வேறு எவரும் சொல்ல மாட்டார்கள். (சுவாமி விவேகானந்தர்) சமநோக்கு இனிமையைத் தருகிறது. இதன் உண்மையை ஒவ்வொரு கணமும் அனுபவத்தில் காணுகின்றோம்(மகாத்மா காந்தி – 24-05-1945)இறைவனால் மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற அளவற்ற நன்மைகள் எல்லாவற்றிலும் மேலானது சிந்திக்கும் சக்தியாகும். அதிலும் எதைப்பற்றியும் சிந்தித்துத் தீர்மானத்திற்கு வரக்கூடிய சக்தியே மிக உயர்ந்தது எனலாம். ஆகையால் நீங்கள் மேற்கொள்ளும் எந்த வேலையானாலும்சரி அந்த வேலையைப் பற்றிய உங்களின் தீர்மானம் சரியானதாக இருக்கட்டும். அப்பொழுது தான் இறைவன் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பார். (இந்து தர்ம சாத்திரம்)
இன்றைய விஞ்ஞான முன்னேற்றங்கள் பேராசையைத்தான் தூண்டி விடுகின்றன. ஆசைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமாகத்தான் மனஅமைதியையும், திருப்தியையும் பெற முடியும். உலகிலே எதுவும் நிரந்தரமல்ல. அந்தஸ்து, அதிகாரம், பதவி யாவும் நிலையில்லாதவை. இவற்றில் பற்று வைத்துக்கொண்டு இறைவனைத்தேடி எங்கு சென்றாலும் இறைவன் தென்படமாட்டார். (சத்யசாயி பாபா)
இழுத்தடிக்கும் வேலை உன்னைப் பாழாக்கும். வேலையும் வீணாகும். எல்லா வேளையிலும் விரைந்து செயலாற்று: நல்லதே நடக்கும். (றோபேட் சவுத்வேல்) சிறிய செலவுகள்தாமே என்று அலட்சியமாக இருக்காதீர்கள். சிறிய ஓட்டை பெரிய கப்பலையும் முழ்கடித்துவிடும். (பிராங்கிலின்) ஒரு நிமிடம் தாமதிப்பதை விட மூன்று மணி நேரம் முன்னதாக இருப்பது நல்லது. (ஷேக்ஸ்பியர்) வழுக்கை விழுந்தபின் வாழ்க்கையில் கிடைக்கும் சீப்பு தான் அனுபவம். (ஐரிஷ் பழமொழி)
எல்லா இனத்தையும் சமமாகவே கருதுங்கள். மக்கள் சமுதாயத்திடம் அன்பும் ஆதரவும் கொண்டு வாழுங்கள். ’எல்லாத்திசைகளில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் எனக்கு நண்பர்களாக இருக்கவேண்டும்’ என்று பிரார்த்தனை செய்யுங்கள். (இந்து தர்ம சாத்திரம்) அன்பு ஒருபோதும் வேண்டுவதில்லை; அது எப்பொழுதும் கொடுப்பது. அன்பு எப்பொழுதும் கஷ்டப்படுவது, ஆத்திரப்படுவதில்லை. தானே பழி செய்வதுமில்லை. (காந்தி) ’வீணாய்ப்போன அன்பு’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்! அன்பு என்றுமே வீணாவதில்லை. (லாங்பெல்லோ
ஒரு மருத்துவருடைய கீர்த்தியானது, அவர் பாதுகாப்பின்போது இறந்துபோன புகழ்பெற்றவர்களின் எண்ணிக்கையைக் கொண்டே கணிப்பிடப்படுகிறது. (பெர்னாட் ஷா) கீர்த்திக்குத் தகுதியில்லாமல் அதைப் பெறுவதைக் காட்டிலும், கீர்த்திக்குத் தகுதியாயிருந்தும் அதைப் பெறாமலிருப்பது சிறந்தது. (மார்க் ட்வெய்ன்) உழைக்கவும், அதன்பின் அந்த உழைப்பின் விளைவுக்காகக் காத்திருக்கவும் கற்றுக்கொள்(லோங் பெல்லோ) மரியாதையும், ஆதாயமும் ஒரே பையில் தங்குவதில்லை (பழமொழி)உலகில் சொல்லப்பட்டவைகளில் நல்லவற்றை எல்லாம் கற்றுக் கொள்வதே உயர்ந்த கலாச்சாரம்.(மத்தியூ ஆர்னோல்ட்) கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விடயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. வாழ்க்கையை உருவாக்கக்கூடிய, மனிதனை மனிதனாக்கக் கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக் கூடிய கருத்துக்களைக் கிரகித்து அவற்றை நாம் நம்முடையவைகளாக ஆக்கிக் கொள்வதே கல்வி என்பதாகும். (சுவாமி விவேகானந்தர்) பள்ளிக் கதவைத் திறப்பவன் சிறைச்சாலைக் கதவை மூடுவான். (விக்டர் ஹ்யூகோ) அரைகுறைப் படிப்பு அதிக ஆபத்து. (போப்)
திருவெம்பாவை
http://www.sivasiva.dk/
மார்கழி மாதம் தஷிண அயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.
மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமானை குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இதுவாகும். சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப் பெறுகின்றது.
மார்கழி மாதத்தில், பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். மார்கழியில் நோற்பதால் "மார்கழி நோன்பு" என்றும், கன்னிப்பெண்களாலும், "பாவை" அமைத்து நோற்கப் படுவதாலும் "பாவை நோன்பு" என்றும் அழைக்கப் பெறுகின்றது.
சைவகன்னியர்கள் பனி நிறைந்த மார்கழி மாதத்தில் பொழுது புலர்வதன் முன் எழுந்து, மற்ற தோழியர்களையும் (பெண்களையும்) எழுப்பி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என அழைத்து ஆற்றங்கரை சென்று, "சீதப் புனல் ஆடி சிற்றம்பலம் பாடி" ஆலயம் சென்று "விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உருகி உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆக" அருள் தருவாய் என வேண்டுவர்.
வைணவ கன்னியர்களும் பொழுது புலர்வதன் முன் எழுந்து தமது தோழியர்களை அழைது ஆற்றங்கரை சென்று, சீதப் புனல்ஆடி அங்குள்ள மணலினால் "பாவை" போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை கௌரி தேவியாக ஆவகணம் செய்து பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி பாடித் துதித்து பின் ஆலயம் சென்று வழிபட்டுகின்றனர்.
மணிவாசகப் பெருமான் பாடியருளிய திருவெம்பாவையும், ஆண்டாள் அருளிய திருப்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டவை. மார்கழி நோன்பு, சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்துவரும் நோன்பாகும் என்பது பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் சங்ககால நூல்களால் அறியலாம்.
மணமாகாத பெண்கள் இந்த நோன்பை நோற்கின்றனர். ''அம்பா ஆடல்'' என்பதற்குத் தாயுடன் ஆடுதல் என்று பொருள். பாவை போல ஒரு தாய் கடவுளின் வடிவை அமைத்து வணங்கி வழிப்பட்டுப் பின் நீராடுவர். பாவை நோன்பு நோற்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர் என்பது நம்பிக்கை. இது நாட்டில் மழை பெய்ய நோற்கும் நோன்பு என்று கூட கொண்டனர். கற்பே மழை தரும் என்று நம்பிய தமிழுலகம் இக்கன்னியர் நோன்பை மழைக்கென நோற்கும் நோன்பாகவும் கருதினர். பின்னர் இந்த இரண்டையும் வேறு என பிரிப்பதும் வழக்கமாகிவிட்டது
பெண்கள் அழகை பெற விரும்பினால் செய்யும் நோன்பு ஒன்றை விஷ்ணு தருமோத்த புராணம் கூறுகிறது. இந்த நோன்பு மார்கழி மாதத்தில் நடைபெறும் என்றும் அப்போது அவியுணவே கொள்ளுதல் வேண்டும் என்றும் அந்தப் புராணம் கூறுகிறது. அம்பா ஆடல் என்பதற்கும் உலகத் தாயின் வடிவைப் பாவையாக அமைத்து வழிபடுவது என்று பொருள் கூறலாம். .
வைணவப் பெண்கள் கண்ணனின் நெறிவாழும் ஆடவரையே கணவனாகப் பெறவும், சைவ மங்கையர் சிவநெறியில் தோய்ந்த உள்ளம் உடைய ஆடவரையே கணவராகப் பெறவும் வேண்டிச் சிறப்பாக இந்நோன்பை மேற்கொள்கின்றனர்.
மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது பாடியருளிய 'திருவெம்பாவை'யும் பன்னிரண்டும், ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் பாடியருளிய பாவைப்பாட்டாகிய 'திருப்பாவை' யும், பாவைப்பாட்டுக்களில் சிறந்தவையாகும். கன்னிப் பெண்கள் தோழியரை நீராட வரும்படி அழைக்கும் போதும், தோழியருடன் நீராடும் போதும் இப் பாவைப் பாடல்களை பாடி ஆடுகின்றனர்.
அம்பாள் ஆலயங்களிலும், சிவன் ஆலயங்களிலும் அதிகாலையில் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழிச்சி 10 பாடல்களும், திருவெம்பாவை 20 பாடல்களும் பாடப்பெறுகின்றன. வைணவ ஆலயங்களில் ஆண்டாள் பாடியருளிய திருப்பாவை 30 பாடல்களும் பாடப்பெறுகின்றன.
புராணக் கதைகள்: கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும். திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க இலங்கை போன்ற நாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இன்றும் செல்வது வழக்கம். சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.
எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.
சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.
தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களில் இல்லங்களுக்குச் சென்றார். முனி பத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான் தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார் மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆர்த்திரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது
மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.
இவ் விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாரணஞ் செய்வர். |
முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மூலமூர்த்தியாக வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் விளங்குகின்றார் பரிவார மூர்த்திகளாகப் பிள்ளையார் வயிரவர் நவக்கிரகம் ஐயனார் மயூரம் பலிபீடம் ஆகியன காணப்படுகின்றன. இக்கோயிலின் மணிக்கூட்டு கோபுரமும் காண்டாமணியும் வெகு சிறப்பானமுறையில் அமைந்துள்ளன.
அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்
அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார். யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார். Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன. ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.
இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். மூச்சை நன்றாக இழுத்தபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக வெளியே விட்டபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும். செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?
முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மூலமூர்த்தியாக வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் விளங்குகின்றார் பரிவார மூர்த்திகளாகப் பிள்ளையார் வயிரவர் நவக்கிரகம் ஐயனார் மயூரம் பலிபீடம் ஆகியன காணப்படுகின்றன. இக்கோயிலின் மணிக்கூட்டு கோபுரமும் காண்டாமணியும் வெகு சிறப்பானமுறையில் அமைந்துள்ளன.
கார்த்திகை விரதம்
கார்த்திகை விரதம், முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப் பட்ட ஒன்று என கூறுவர். அதனால்தான் கந்தன் அப்பெண்களின் பெயரால், “கார்த்திகேயன்” என அழைக்கப்படுகிறான். மேலும் ஒரு தகவல் உண்டு. சூரபத்மனை அழிக்க வேண்டி தேவர்கள் விரதமிருந்து ஈசனைத் துதித்தனர். ஈசன் தமது நெற்றிக் கண்ணைத் திறக்க, அதிலிருந்து ஒளிவடிவில் ஆறு நெருப்புப் பொறிகள் தோன்றி குழந்தையாய் உருமாறியது. அவ்வாறு ஆறுமுகன் அவதரித்த தினமே திருக்கார்த்திகை தினம். இது தவிர இறைவன் திரிபுர சம்ஹாரம் செய்த தினம் கார்த்திகை தினம் என்றும் ஒரு கருத்துண்டு. இக் கார்த்திகை தினத்தில் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கார்த்திகை விரதம் பற்றிக் கந்த புராணம்,
“நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்
தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்”
தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்”
என்கிறது.
தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தல் சிறப்பு. முருகப்பெருமானுடைய விரதங்களுள் முக்கியமானது கார்த்திகை விரதம்.
விரத முறைகள்
தை மாதத்திலோ அல்லது முருகனுக்கு உகந்த கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதலாகவோ இவ்விரதத்தைத் துவங்கலாம். முருகனையே துதித்து உபவாசம் இருக்க வேண்டும். இயலாதோர் காலை, பகல் உணவு தவிர்த்து, இரவில் பால், பழம், பலகாரம் உண்ணலாம். 12 வருடங்கள் தொடர்ந்து பக்தியுடனும், உண்மையான நம்பிக்கையுடனும் இவ்விரதத்தை மேற்கொள்பவனுக்கு முருகனின் அருள் காட்சி கிட்டும் என்பது நம்பிக்கை. விரத நாளில் மாலை ஐந்து மணிக்கு மேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே சரியான விரத நாள் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
இவ்விரதம் முருகனுக்கு மட்டுமல்ல சிவபெருமானுக்கும் உகந்தது. அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்து அவனைக் கொன்ற போது அவன் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கம் அவள் கையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய, கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி அம்பிகை விரதம் இருந்தாள். அதுவே கார்த்திகை விரதம். அவ்விரதத்துக்கு மகிழ்ந்த ஈசன் அன்னை பார்வதி தேவிக்கு ஒளி உருவில் காட்சி கொடுத்ததுடன், தேவிக்கு இடப்பாகம் கொடுத்து ஏற்றுக் கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதனால்தான் அண்ணாமலையில் அந்த நாளில் தீபம் ஏற்றப்பட்டு கார்த்திகை விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்து வந்த சுடர்காணில் பசிபிணி இல்
லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்துஓர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம் என்றார்

என்கிறது அருணாசல புராணம் (பாடல் – 159)
கார்த்திகை விரதத்தின் பலன்
முறையாக ஒருவன் விரதம் மேற் கொள்ளும் போது அது வரை செய்த பாபங்கள் நீங்குவதுடன் மகத்தான புண்ணிய பலனும் கிடைக்கும். வாழ்க்கை ஒளிரும். தீவினைகள் அகலும்.
முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மூலமூர்த்தியாக வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் விளங்குகின்றார் பரிவார மூர்த்திகளாகப் பிள்ளையார் வயிரவர் நவக்கிரகம் ஐயனார் மயூரம் பலிபீடம் ஆகியன காணப்படுகின்றன. இக்கோயிலின் மணிக்கூட்டு கோபுரமும் காண்டாமணியும் வெகு சிறப்பானமுறையில் அமைந்துள்ளன.
Subscribe to:
Posts (Atom)