திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்
முகப்புவயலோன் திருக்கல்யாண பதிவுகள்

தீர்த்த திருவிழா

முகப்புவயலோன் தீர்த்த திருவிழா சமுத்திரத்திலே அடியார்கள் படைசூழ மிகவும் சிறப்பான முறையிலே இடம்பெற்றது. காலை உற்சவம் மதிய அன்னதானத்துடன் நிறைவுபெற மாலை உற்சவம் கொடியிறக்கம் சண்டேஸ்வரா் உற்சவம் சிவாச்சாரியர் வணக்கத்துடன் இனிதே நிறைவு பெற்றது.

தேர்த்திருவிழா 2019

  முகப்புவயலிலே இருந்து அருளாசி புரிகின்ற சிவசுப்பிரமணியரின் தேர்த்திருவழாவானது சிறப்பாக நடைபெற்றுள்ளது இதன் பதிவுகள்

எட்டாம் திருவிழா

 எட்டாம் திருவிழா பதிவுகள்
எம்பெருமான் ஆலயத்தில் இடம் பெற்ற எட்டாம் திருவிழாவானது மிகவும் சிறப்பாக இடம் பெற்றது எம் பெருமான் திருவெண்காட்டு விநாயகர் ஆலயத்தில் வேட்டை திருவிழாவில் பங்குகற்றிய காட்சிகள்

ஏழாம் திருவிழா

ஏழாம் திருவிழா பதிவுகள்
முகப்புவயலோன் வருடாந்த மகோற்சவத்தின் ஏழாம் திருவிழா உபயகார அடியார்களினால் சிறப்பான முறையிலே ஒழுங்கமைக்கப்பட்டதுடன் வழமை போல அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஆறாம் திருவிழா

முகப்புவயலோன் ஆறாம் திருவிழா சிறப்பான முறையிலே இடம் பெற்றதுடன் உபயகார அடியார்களினால் வழமை போல சிறப்பாக மதிய அன்னதானமும் ஐயனார் பொங்கலும் ஒழுங்கமைக்கப்பட்டது

ஐந்தாம் திருவிழா

ஐந்தாம் திருவிழா பதிவுகள்
மகோற்ச ஐந்தாம் நாள் திருவிழாவானது உபயகார அடியார்களால் வழமை போல சிறப்பாக மதிய அன்னதான நிகழ்வுடன் ஒழுங்கமைத்து சிறப்பிக்கபட்டது.

நான்காம் திருவிழா

நான்காம் திருவிழா பதிவுகள் முகப்புவயலோன் மகோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன் மதியநேர அன்னதான நிகழ்வும் உபயகார அடியார்களினால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்பட்டது

மூன்றாம் திருவிழா

மூன்றாம் திருவிழா பதிவுகள்
மண்டைதீவு முகப்புவயலில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் சிவசுப்பிரமணிய சுவாமி மகோற்சவ மூன்றாம் திருவிழாவானது மிகசிறப்பாக இடம் பெற்றதுடன் திருவிழா உபயகார அடியார்களினால் அன்னதான நிகழ்வும் வழமைபோல ஒழுங்கமைப்பட்டது.

இரண்டாம் திருவிழா


இரண்டாம் திருவிழா பதிவுகள்  எம்பெருமானின் இரண்டாம் திருவிழா சிறப்பாக இரண்டாம் திருவிழா உபயகார அடியார்களினால் ஒழுங்கமைக்கப்பட்டதுடன் மதிய அன்னதானமும் வழமை போல வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொடியேற்றம் 2019

மண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி மகோற்சவம் கொடியேற்றத்துன் ஆரம்பமாகிய போது.
கொடியேற்ற தினம் அன்னதான பணியை சிவப்பிரகாசம் குடும்பத்தினர்  ஒழுங்கமைத்து சிறப்பித்துள்ளனர்.

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் சங்காபிஷேகம்

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற  சங்காபிஷேகத்தின் பதிவுகள்

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் பிரதிஷ்டா கும்பாவிஷேகம்

மண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலயத்தில்  05/06/2019 நடைபெற்ற பிரதிஷ்டா கும்பாவிஷேகம்

வருடாந்த மகோற்சவம் 2019

மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
முருகப்பெருமான் மெய்யடியார்களே! . 

மண்டைதீவு கிராமத்தில் முகப்புவயல் என்னும் திவ்வியபதியில் வேண்டுவார் வேண்டியதை ஈர்ந்தருளும் கலியூகவரதனாகிய வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு நிகழும் மங்கள விஹாரி வருடம் ஆனி மாதம் 8ம் நாள்        (23-06-2019) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் சதய நட்சத்திரமும் ஷஷ்டி திதியூம் கூடிய சுபவேளையில் கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகி தொடார்ந்து பத்து தினங்கள் மகோற்சவம் நடைபெற முருகப்பெருமான் திருவருள்பாலித்துள்ளார்.