பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.
வருடாந்த மகோற்சவம் 2018
மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
மண்டைதீவு கிராமத்தில் முகப்புவயல் என்னும் திவ்வியபதியில் வேண்டுவார் வேண்டியதை ஈர்ந்தருளும் கலியுகவரதனாகிய வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு நிகழும் மங்கள விளம்பி வருடம் ஆனித்திங்கள் 19 ஆம் நாள் (03-07-2018) செவ்வாய்கிழமை காலை 11.00 மணியளவில் சதய நட்சத்திரமும் பஞ்சமி திதியும் கூடிய சுபவேளையில் கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் மகோற்சவம் நடைபெற முருகப்பெருமான் திருவருள்பாலித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)