திருக்கல்யாணம்-2017


எம் பெருமானின் வருடாந்த மகோற்சவத்தை தொடர்ந்து  இடம்பெற்ற திருவிழாவில் பதினொராம் நாள் சனிக்கிழமை (24/06/2017) அன்று இடம் பெற்ற திருக்கல்யாண நிகழ்வின் பதிவுகள். 

ஏழாம் திருவிழா-2017

 20-06-2017 அன்று நிறைவுபெற்ற ஏழாம்  திருவிழாவின் புகைப்படங்களும் கானொளியும்.

வேட்டைத்திருவிழா-2017


எம் பெருமானின் வருடாந்த மகோற்சவத்தின் போது இடம்பெற்ற திருவிழாவில் எட்டாம் நாள் புதன்கிழமை (21/06/2017) அன்று இடம் பெற்ற வேட்டைத்திருவிழாவின் பதிவுகள்.

தேர்த்திருவிழா

மண்டைதீவு முகப்பு வயல் முருகனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 14.06.2017 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து  திருவிழாக்கள்  இடம்பெற்று-கடந்த 22.06.2017 வியாழக்கிழமை அன்று     எம்பெருமான் வள்ளி,தெய்வானையுடன் தேரேறி பக்தர்கள் கரம்பற்றி வடம் இழுக்க வீதியுலா வந்தருளிய காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.

நான்காம் திருவிழா-2017

மூன்றாம் திருவிழா

மூன்றாம் திருவிழாவின் பதிவுகள் 16-07-2017 அன்று சிறப்பாக இடம்பெற்ற எம்பெருமானின் உற்சவத்தின்போது  சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இரண்டாம் திருவிழா-2017

15-07-2017 அன்று இடம்பெற்ற இரண்டாம் திருவிழாவின் பதிவுகள்
இரண்டாம் திருவிழா உபயகாரர்களால்  சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட து.  மாலை வழிபாட்டின் போது எம்பெருமான் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டவாறு கிடாய் வாகனத்தின்
 மீது ஏறி வலம் வந்து அடியவர்களுக்கு திருவருள் காட்சி கொடுத்தருளினார்.   விழாவின் போது உபயகாரர்களால்  குத்துவிளக்கு ஒன்று எம்பெருமானிற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

கொடியேற்றம்-2017

மண்டைதீவு முகப்புவயல்  சிவசுப்பிரமணியனுக்கு  14.06.2017 அன்று கொடியேற்ற விழா ஆரம்பமாகி சிறப்புற நடைபெற்றது. 

ஆலய கட்டட வேலை

எம்பெருமானின் ஆலயத்தின் கட்டடவேலைகளை சிறிது சிறிதாக முன்னெடுக்கும் பணியில் மண்டைதீவு உறவுகளும் முருகனடியார்களும் இணைந்திருப்பதால் தற்பொழுது உள்வீதி கொட்டகைக்கு தூண் அமைக்கும் பணியும் வெளிவீதி பூச்சு வேலையும் நடைபெற்று வருகின்றது இத்திருப்பணியில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
திருப்பணியில் இணைந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.