ஈழத் திரு நாட்டின் வட புலத்தில் மண்டைதீவில் கோயில் கொண்டு எழுந்தருளிய முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமிஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது. அதனை தொடர்ந்து தேர்த்திருவிழா நூற்றுக்கணக்கான மக்கள் புடை சூழ 03/07/2016 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க, தேவார பாரயணங்கள் ஒலிக்க, பஜனைகள் இசைக்க கந்தப்பெருமான் தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.